Monday, February 14, 2011

ஸ்ரீலங்கன் விமானத்தை நடுவானில் தகர்க்கப் போவதாக மிரட்டல் - அவசரமாக மாலைதீவில் தரையிறக்கம்

   
கொழும்பிலிருந்து லண்டன் நோக்கிச் சென்று
 கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்
 விமானத்தில் குண்டு இருப்பதாகப் பயணி
 ஒருவர் விடுத்த மிரட்டலையடுத்து அந்த
விமானம் மாலைதீவில் அவசரமாக
தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் இந்தச்
 சம்பவம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கன்
எயர்லைன்ஸ் எயர்பஸ் ஏ-340 விமானம்


 ஒன்று இன்று பிற்பகல் கொழும்பில்
 இருந்து 199 பயணிகளுடன் லண்டன்
நோக்கிப் புறப்பட்டது. அதில் பயணம்
செய்த பிரித்தானியரான கிளெமென்ற்
போல் என்பவர் விமானத்தில் குண்டு
 ஒன்று இருப்பதாகவும் அது வெடிக்கப்
 போவதாகவும் சக பயணிகளை
மிரட்டினார். இதையடுத்து அந்த
விமானம் அவசரமாக மாலைதீவு
தலைநகர் மாலி விமான நிலையத்தில்
தரையிறக்கப்பட்டது.




அங்கு மாலைதீவு பாதுகாப்புப் படையினர்
பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு
ஒரு மணி நேரமாகத் தேடுதல் நடத்தினர்.
அதன் பின்னரே அந்தப் பயணி விமானத்தில்
 குண்டு இருப்பதாகக் கூறி ஏமாற்றியது தெரியவந்தது.


இதையடுத்து குண்டு மிரட்டல் விடுத்த
 பிரித்தானியப் பயணி மாலைதீவு
பாதுகாப்புப் படையினரால் கைது
செய்யப்பட்டார்.
பின்னர் அந்த விமானம் லண்டன் நோக்கி
 மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக
 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பேச்சாளர்
ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment