முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரின் முடிவில் கைப்பற்றிய வாகனங்களை ஏலத்தில் விற்பதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரை உரிமை கோரப்படாதுள்ள கனரகவாகனங்கள், உந்துருளிகள், மற்றும் ஏனைய வாகனங்களையே ஏலத்தில் விற்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்யுமாறும், நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனுக்குத் தாம் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைவிடப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பித்துப் பெற்றுக் கொள்ளுமாறு ஒரு ஆண்டுக்கு முன்னரே அறிவித்திருந்தேன்
.

ஆனாலும் இதுவரை உரிமை கோரப்படாமல் உள்ள வாகனங்களையே ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளேன்.
கைவிடப்பட்ட நிலையில் இருந்த பெரும்பாலான வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
இன்னமும் 800 உந்துருளிகளும், 50 கனரக வாகனங்களுமே உரிமை கோரப்படாமல் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment