Friday, February 18, 2011

யாழ். நகரில் குவிந்து நின்ற கலவரம் அடக்கும் பொலிஸார்


கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட வழமைக்கு மாறான பாதுகாப்பு நடவடிக்கையால் யாழ்.நகரில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கலகம் அடக்கும் பொலிஸார் பெரும் அளவில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு என்றும் இல்லாத வண்ணம் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்தின் முன்னால் காலை 9 .00 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.


அத்துடன் யாழ்.நகரில் அங்காங்கே இராணுவத்தினரும் தரித்து நின்றனர் இந்நிலையில் அசம்பாவிதம் ஏதோ இடம்பெற உள்ளது என வதந்திகள் பரவின பொது மக்களில் பலருக்கு இந்நடவடிக்கை அச்சம் கலந்த பல கேள்விகளை எழுப்பியது.

எதிர்க் கட்சி ஒன்றின் ஊர்வலம் ஒன்று இடம்பெற இருந்த நிலையிலேயே  இப்பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன என்று பின்னர் தகவல்கள் வெளியாகின.

ஆயினும் மாலை வரை எந்த அரசியல் கட்சியின் ஊர்வலமும் இடம்பெறவே இல்லை.  பொலிஸாரும், இராணுவத்தினரும் காத்திருந்து விட்டு சென்றனர்.

No comments:

Post a Comment